கொல்கத்தா:

நிலக்கரி மாஃபியா என்ற குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், காதை பிடித்துக் கொண்டு மோடி 100 முறை தோப்புக் கரணம் போட வேண்டும் என மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.


மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டம் கோட்சிலா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, புருலியா பகுதி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் நிலக்கரி மாஃபியாக்களாக செயல்படுவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.

அந்த குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், காதைப் பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி 100 முறை தோப்புக் கரணம் போடவேண்டும் என்றார்.

இதற்கிடையே, வியாழக்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சிட் ஃபண்ட் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியவர்களை பிடிக்க மம்தாவுக்கு தைரியம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

என்னை பிரதமராகவே அங்கீகரிக்கவில்லை என்று கூறி, அரசியல் சாசனத்தையே மம்தா பானர்ஜி அவமதித்துள்ளார் என்று கூறிய மோடி, அதேசமயம் பாகிஸ்தான் பிரதமரை அவர் அங்கீகரிக்கிறார் என்றார்.

நாட்டின் பிரதமரோடு பேச முடியாத அளவுக்கு மம்தாவுக்கு ஈகோ உள்ளது என்றார்.