ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் அசோக் படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார்.

இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். ஜனார்த்தனன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, ஜனநாயக மாதர் சங்க மாவட்டத்தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் பாண்டி செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு படுகொலையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோன்று, இக்கோரிக்கையை வலியுறுத்தி அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.