டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு “வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும்” என டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்தியஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் கடந்த வாரம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனையடுத்து அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையில், மத்தியஅரசு, தனக்கு ஆதரவான விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் அமைப்பு, வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என மத்தியஅரசுக்கு நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளடன், மத்திய அரசு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளனர்.