மதுரை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டதுக்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, விவசாயிகள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் முழு அடைப்பு, கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் ரமேஷ் என்பவர், மதுரை உயர்நீதி மன்றத்தில், தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்க தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதி மன்ற கிளை,  தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில்  நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.