ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், , ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினாவில்நேற்று காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களின் தங்களது முதன்மை கோரிக்கையாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரிடையாக தங்களைச் சந்திக்க வேண்டும் என்பதுதான். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவது பற்றி தீர்மானிப்போம் என்று நேற்று காலை முதல் கூறிவந்தார்கள்.
ஆனால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினமான நேற்று, அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் நேற்று வெளியானது. அந்த படத்தின் சிறப்பு காட்சியை சென்னையில் உள்ள அபிராமி மாலில் முதல்வர் ஓ.பி.எஸ். பார்த்து ரசித்தார்.
நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களைச் சந்திக்க வராத முதல்வர் திரைப்படத்துக்கு சென்று ரசித்தது நியாயமா என்ற கேள்வியை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.