சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் தொடங்கியது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. அதிமுக சார்பில் 3ம் தேதி உண்னாவிரத போரட்டம் நடக்கவுள்ளது. இ.கம்யூ சார்பில் ஏப். 4ம் தேதி ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 3ம் தேதில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் பொதுமக்கள் போராட்டத்தி ஈடுபட்டனர். சமூக வலைதலத்தில் இதன் புகைப்படம் வைரலாகியுள்ளது. இதனால் அங்கு இளைஞர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி மெரினாவில் நடந்த பிரம்மாண்ட போராட்டம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தொடங்கப்பட்டுள்ள போராட்டமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.