மெரினாவில் வரும் 29-ம் தேதி போராட்டம்: வேல்முருகன்

Must read

சென்னை:

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி பகுதியில் உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் வரும் 29ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)   மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே  கட்சிகளின் கொடியின்றி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளாா்.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்  தலைமையில் அவசர பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அந்த  பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக்கோரிய போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழக அரசு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தோ்வை அமைதிக்க கூடாது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து,  சென்னை மொினாவில் உள்ள உழைப்பாளி சிலைக்கு அருகே வருகிற 29ம் தேதி கட்சியின் கொடியின்றி போராட்டம் நடத்தப்படும் என்று வேல்முருகன் அறிவித்துள்ளார்.

மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை காவல்துறை தடை விதிதுள்ள நிலையில், வேல்முருகனின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article