சென்னை: சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு நடத்து செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழகத்தில் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் இன்று சட்டமன்ற பேரவையின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்று கூடியது. காலையில் அவை கூடியதும், கேள்வி நேரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி 110ன் கீழ் அறிக்கை வாசித்தார்.
இதையடுத்து நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொத்து வரி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சொத்து வரி உயர்வை திமுக அரசு மனமுவந்து செய்யவில்லை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காதபோது, வரியை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், ஏழை எளிய மக்களை பாதிக்காதவாறு வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், சொத்து வரி உயர்வு 83 சதவீத மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது என்றும், கட்டடங்களின் பரப்பளவு வாரியாக வகை பிரித்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என கூறினார்.
ஆனால், எதிர்க்கட்சியினர் முதல்வர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராகவும், சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதையடுத்து, அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், சொத்து வரியை திரும்பப் பெறக் கோரி அ
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், மக்கள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு கடுமையாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், சொத்துவரியை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு குறிப்பிடவில்லை மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு என குற்றம் சாட்டினார்.
சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியவர், சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு விளக்கம் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். முதல்வரின் பதில் திருப்தியளிக்காததால் வெளிநடப்பு செய்தாகவும் தெரிவித்தார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்கும் சொத்து வரி உயர்வால், வாடகை அதிகமாக கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது