சென்னை:
தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையானது படிப்படியாக எளிமைப்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அப்போது பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சார் பதிவாளர்கள் மீது மட்டுமின்றி எழுத்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
மேலும் முறைகேடான பத்திரப்பதிவுகளை தடுக்க எழுத்தர் மற்றும் வழக்கறிஞர்களில் உரிம எண்களை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வருவதாகவும், இதனை செய்யத் தவறும் பட்சத்தில் அந்த பத்திரப்பதிவு செல்லாது எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.