சென்னை: தமிழ்நாட்டில்,  இணைய வழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் உருவாக்கப் பட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்களில் பலர் தோல்விஅடைந்து தற்கொலை முடிவை நாடி வருவதால், அதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு சட்டமன்றப் பேரவையில் 19.10.2022 இல் நிறைவேற்றப்ப்பட்டது.

ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதாக ஆளுநரிடமிருந்து 06.03.2023 இல் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. 23.03.23 இல் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு, ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. ஒப்புதல் அளிக்கப்படாமல் இருந்த நிலையில், சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த அன்றே அரசிதழிலும் வெளியிடப்பட்டு அமலாகியுள்ளது

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி தலைமைச் செயலாளர் பதவிக்கு குறையாத ஓய்வுபெற்ற அதிகாரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் இந்த அமைப்பு செயல்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு சேவை வழங்கும் நிறுவனங்களை இந்த அமைப்பு கண்காணிக்கும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், ஒரு மாதத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் எனவும், இதற்காக ஒரு லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டின் பாதுகாப்பு, சர்வர் இருக்கும் இடம், தகவல் மையம் தொடர்பான விவரங்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டு செயலியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப விவரங்கள், செயற்கை நுண்ணறிவு தகவல்களையும் அந்நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவை தவிர பயனாளர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளின் விவரங்கள், நேரக் கட்டுப்பாடு விவரங்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில்,  இணைய வழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம்

தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம் 2022 இன்படி தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம். தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன், உறுப்பினர்களாக டாக்டர் எம்.சி. சாரங்கன், ஐ.பி.எஸ்., (ஓய்வு), டாக்டர் சி.செல்லப்பன் – ஓய்வு பெற்ற பேராசிரியர், ஓ.ரவீந்திரன் – உளவியலாளர், விஜய் கருணாகரன் -இன்கேஜ் குழுமத்தின் நிறுவனர், ஆகியோரை கொண்ட ஆணையம் அமைப்பு இணைய வழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.