மக்கள் உயிரைக் காக்க மதுவிலக்கு அமுல் இல்லை : அமைச்சரின் அறிவிப்பு

Must read

சென்னை

து அருந்துவோர் உயிரை காக்க மதுவிலக்கை உடனடியாக அமுல்படுத்த முடியாது என தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை ஒட்டி மதுவிலக்கை அமுல் படுத்த கோர்க்கை எழுந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து தமிழக அரசுக்கு பலமுறை அறிவுரை அளித்துள்ளது.

கடந்த வருடங்களில் நீதிமன்ற தீர்ப்புக்கிணங்க நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதால் மக்கள் சிறிது நிம்மதி அடைந்தனர். ஆனால் அதன் பிறகு மேல்முறையீடு மற்றும் சாலைப் பெயர் மாற்றம் போன்றவை மூலம் மூடப்பட்ட அத்தனை மதுக்கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டன.

அதனால் மக்களில் பலர் பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை அளித்து வருகின்றனர். தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. “மது குடிப்பதை திடீர் என நிறுத்தினால் குடிப்பவர்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படும்.

அதனால் மதுவிலக்கை உடனடியாக அமுல் படுத்த முடியாது. மது அருந்துவோர் உயிரைக் காக்க மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும்” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article