சென்னை :
மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவ சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு மருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் எதிரகாலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பேராசிரியர்களை நிரப்பக்கோரி முதுநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூறியதாவது,
காலியாக உள்ள மருத்துவ பேராசிரியர் பதவிகளை இடஒதுக்கீடு முறையை பின்பற்றி அரசு பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் தலைமை மருத்துவர் நியமனத்திலும் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர்.