ஸ்ரீவில்லிபுத்தூர்:
மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்த பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்டவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு செல்ல அழைப்பு விடுத்தது தொடர்பான வழக்கில், நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, முருகன், கருப்பாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், கருப்பாமி ஆகியோர் ஆஜரான நிலையில், ஆஜராகாத நிர்மலா தேவி ஆஜராகா வில்லை. அப்போது, ஆஜரான நிர்மலா தேவி வழக்கறிஞர், நிர்மலாதேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், அடுத்த விசாரணைக்கும்போது, நிர்மலாதேவி ஆஜராகாத நிலையில், அவரை கைது செய்து ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், காவல்துறையினர் நிர்மலாதேவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டார்.