சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் என்பவரை பணியிடை நீக்கம் செய்து ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி மெக்கானிக்கல் பிரிவில் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வந்த சச்சின் ஜெயின் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியது.
இந்த குழுவினர் ஐஐடிக்கு சென்று நேரடி விசாரணை நடத்தியதுடன், சக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் என்பவர் மாணவர் சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியது தெரிய வந்தது. இதனால், ஏற்பட்ட கடும் மன உளைச்சலில் மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் பேரில், பேராசிரியர் ஆசிஷ்குமாiர ஐஐடி நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.