தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என அனைத்திலும் பணிபுரிந்து வருபவர் ஆர்.கே.சுரேஷ்.

நேற்று (அக்டோபர் 4) முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்

பாஜகவில் இணைந்தது குறித்து ஆர்.கே.சுரேஷ் பேசுகையில் ’12 வருடங்களுக்கு முன்பு பாஜக யூத் விங் தொடங்கப்பட்டபோது அதில் முழுமையாகப் பணிபுரிந்தேன். இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பாஜகவுக்குப் பின்னால் இருந்துதான் பணிபுரிந்து வருகிறேன். இன்று தான் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளேன்.

தமிழகத்துக்குப் பல நல்ல காரியங்கள் பண்ணப் போகிறோம் . மக்கள் யாருமே #GoBackModi என்று ட்ரெண்ட் பண்ணுவதில்லை. அதற்கென்று ஒரு டீம் வைத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் இனிமேல் நடக்காது என கூறியுள்ளார் .