இந்திய சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்களின் இழப்பு திரைத்துறையை மட்டுமல்லாது, சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான ரகுநாதன் மரணமடைந்தார்.
தனது ஆர்.ஆர்.பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள், வரப்பிரசாதம், நீ வாழவேண்டும், அக்னிப்பிரவேசம், ராஜராஜேஸ்வரி, உட்பட 18 படங்களை தயாரித்துள்ளார் .

1975 ஆம் ஆண்டு கமல் ஹாசனை பட்டாம்பூச்சி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர். சமீபத்தில் ரகுநாதன் தயாரித்த மரகதக்காடு என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
அவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று (மே 22) காலமானார் அவருக்கு வயது 79.

பழம்பெரும் தயாரிப்பாளாரன அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]