புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ’சங்குசக்கரம்’ படம் வரும் 29 ம் தேதி வெளியாக இருந்த நிலையில், புகார் காரணமாக படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலரான செல்வகுமார் என்பவர்,  ‘சங்குசக்கரம்’ என்ற  திரைப்படத்தில் சிறுவர், சிறுமியர் துண்புறுத்தப்பட்டு நடிக்க வைத்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் கூறி உள்ளார்.

இந்த புகார் காரணமாக படம் வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது. புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினால் படம் வெளியாவதில் பிரச்சினை ஏற்படும் என்றும், இல்லையென்றால் திட்டமிட்டப்படி 29ந்தேதி படம் ரிலீசாகும் என கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]