அகமதாபாத்: புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடம்பெற்று வெளியேறிய நிலையில், அத்தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் நுழைந்துள்ளன.

தற்போது நடைபெறுவது புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன். முதல் அரையிறுதியில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லியை சந்தித்தது. இதில் 44-38 என்ற புள்ளிகள் கணக்கில் நடப்புச் சாம்பியன் தோல்வியடையவே, இறுதிக்கு முன்னேறியது டெல்லி.

மற்றொரு அரையிறுதியில் மும்பை – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் பரபரப்பாக சென்றது. எந்த அணி வெற்றிபெறும் என்ற கடைசிக்கட்ட த்ரில்லிங் ஏற்பட்ட நிலையில், 37-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வென்று, இறுதிக்குள் கால் வைத்தது.

அக்டோபர் 19ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் முதன்முறையாக மோதவுள்ளன டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள்.