வாக்காளர்களுக்கு பரிசு! ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது!

Must read

சென்னை,

சென்னையில் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வழங்குவதாக புகார்கள் குவிந்தன. இதன் காரணமாக கடும் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள்  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான குத்துவிளக்குகள், 3 கார்கள், ஒரு வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவை கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினரும், தேர்தல் பார்வையாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள தேர்தல் பறக்கும் படையினர், காசிமேடு கடற்கரைச் சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

More articles

Latest article