லக்னோ:
பிரியங்கா காந்தி மற்றும் மேற்கு உத்திரப் பிரதேச பொறுப்பாளர் ஜோதிராதித்யா ஆகியோரது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் 60 லட்சம் பேரை சென்றடைந்துள்ளது.
இளைஞர்கள்,பெண்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுக்கும் பதிவு செய்யப்பட்ட பேச்சு, 30 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வழியே சென்றடைந்துள்ளது.
அதேபோல் மேற்கு உத்திரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோதிராதித்யாவின் பதிவு செய்யப்பட்ட பேச்சும் தொலைபேசி அழைப்பு வழியே 30 லட்சம் பேரை சென்றடைந்துள்ளது.
பிரியங்காவின் 3 நாள் உத்திரப்பிரதேச பயணத்தையொட்டி, ஞாயிறன்று தொலைபேசி அழைப்புகள் வழியே இருவரது வேண்டுகோளும், (நான் நாளை லக்னோ வருகிறேன். அரசியலில் புதிய பாதையை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம் என்று நம்புகிறேன்) ஒலித்துக் கொண்டிருந்தது.
திங்கள் முதல் உத்திரப் பிரதேசத்தில் அரசியல் பணியை தொடங்கும் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியுடன் லக்னோவில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.