யநாடு

ணிப்பூர் முதல்வர் வெகுநாட்களுக்கு முன்பே பதவி விலகி இருக்க வேண்டும்  என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வந்தநிலையில் அவர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

கடந்த 8ம் தேதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக வயநாடு சென்றுள்ளார். தற்போது வயநாடு தொகுதியில் உள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவது மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

பிரியங்கா காந்தி மணிப்பூர் முதல்வர் ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம்,

”மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங்கின் ராஜினாமா வெகு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது. வடகிழக்கு மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை தொடர்கிறது

மே 2023இல் மாநிலத்தில் இன வன்முறை வெடித்ததில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகிவிட்டனர். இந்த மோதல் போக்குக்கு இதுவரையிலும் முடிவு எட்டப்படவில்லை.”

என்று கூறியுள்ளார்.