க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட் போன் இலவசம் எனப் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

 

அடுத்த வருடத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தல் பொறுப்பாளராக காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.   அவர் இந்த தேர்தலில் கட்சியை மீண்டும் பலப்படுத்தி ஆட்சியைப் பிடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.  இதற்காகப் பெண் வாக்காளர்களைக் கவர திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் 40% பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  உபி மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண் வாக்காளர்களை விட அதிகமாகும்.   இதனால் பெண்களைக் கவரப் பிரியங்கா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

அவ்வகையில் பிரியங்கா காந்தி பட்டதாரி மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும் எனவும் +2 மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.  பிரியங்காவின் இந்த அறிவிப்பால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் சற்றே கலங்கி உள்ளன என்றே கூற வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.