புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விதைப்பு பருவத்திற்கு முன்னதாக உரங்களின் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.
ரசாயன உரங்களின் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இது தங்களின் வயிற்றில் அடிக்கும் செயல் எனவும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் துணை போவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விதைப்பு பருவத்திற்கு முன்னதாக உரங்களின் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.