டில்லி

தாம் உத்தரப்பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் இல்லை என பிரியங்கா காந்தி மறுத்துள்ளார்.

வரும் பிப்ரவை 10 முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.   இதையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தீவிர தேர்தல் பணி நடத்தி வருகிறார்.  இந்த தேர்தலில் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.

எனவே நேற்று முன் தினம் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.  பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு எந்த முகமும் எங்காவது பார்த்துள்ளீஎர்களா?  என் முகத்தை மட்டுமே எங்கும் பார்க்கலாம்” என பதில் அளித்தார்.  இதையொட்டி பிரியங்கா முதல்வர் வேட்பாளர் என ஒரு ஊகம் கிள்ம்பியது.

நேற்று பிரியங்கா காந்தி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,

“செய்தியாளர்களிடம் நான் மட்டுமே உத்தரப்பிரதேச காங்கிரஸின் முகம் என்னும் நோக்கத்தில் எதுவும் கூறவில்லை. மீண்டும் மீண்டும்  செய்தியாளர்கள் அந்தக் கேள்வி எழுப்பியதால் சற்று மிகைப்படுத்திக் கூறினேன். காங்கிரஸ் கட்சியில் நான்தான் முதல்வர் என எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பாஜகவுக்கு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்குக் கதவு மூடப்பட்டு  மற்ற கட்சிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது.  பாஜகவும் சமாஜ்வாதியும் ஒரே மாதிரியான அரசியலைக் கடைப்பிடிக்கின்றன. அந்த வகையான அரசியலால் அக்கட்சிகள் பலன் அடைகின்றன. 

அந்த கட்சிகளுக்கு மதவாதம் மற்றும் சாதிய வாதம் அடிப்படையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்னும் ஒற்றை நோக்கம் மட்டுமே உள்ளது.  இதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்கிறார்கள்”

எனத் தெரிவித்துள்ளார்.