டில்லி
ஜேஜேபி கட்சியின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்ததும் அஜய் சவுதாலா பரோலில் விடுதலை செய்யப்பட்டதைக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவர் மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட பத்து பேர் திகார் சிறையில் கடந்த 2013 பிப்ரவரி முதல் அடைக்கப்பட்டுள்ளனர். போர்ஜரி செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் 3000 ஆசிரியர்களை நியமித்து லஞ்சம் பெற்றதாக எழுந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 10 வருடச் சிறைத் தண்டனை அளித்தது.
அரியானா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு தற்போதைய சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அஜய் சவுதாலாவின் கட்சியான ஜேஜேபி கட்சி இந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே அக்கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
அக்கட்சியின் தலைவரும் அஜய் தவுதாலாவின் மகனுமான துஷ்யந்த் சவுதாலாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆதரவைப் பெற்ற பாஜக அவருக்குத் துணை முதல்வர் பதவியை அளித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் முடிந்த அடுத்த நாள் அஜய் சவுதாலா பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி வதேரா தனது டிவிட்டரில், பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் அஜய் சவுதாலாவின் விடுதலை செய்யப்பட்டது குறித்து, “இது ஊழலைச் சலவை செய்யும் இயந்திரம்” என விமர்சனம் செய்துள்ளார்.
[youtube-feed feed=1]