ண்டிகர்

பாஜகவுடன் ஜேஜேபி கட்சி கூட்டணி அமைத்ததை எதிர்த்து அக்கட்சி வேட்பாளர் முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

கடந்த 2017 ஆம் வருடம் எல்லை பாதுகாப்புப்படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் தங்களுக்கு அளிக்கும் உணவு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.  அதையொட்டி கடும் சர்ச்சை நிலவியதால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.  அதன் பிறகு அவர் மக்களவை தேர்தல் நேரத்தில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து அக்கட்சியின் கூட்டணி வேட்பாளராகக் களம்  இறங்கி தோல்வி அடைந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் தேஜ் பகதூர் ஜனநாயக ஜனதா கட்சியில் (ஜேஜேபி) இணைந்து அரியானா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் மனோகர் லால்  கட்டாரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை இருந்தது.

எனவே 10 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜேஜேபி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா அக்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வர்  பதவியை அடைந்தார்.   இது தேஜ் பகதூர் யாதவுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.   இது குறித்து ஒரு வீடியோ பதிவு ஒன்றை தேஜ் பகதூர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “பாஜக வுக்கு கூட்டணி கதவுகளைத் திறந்ததன் மூலம் துஷ்யந்த் சவுதாலா மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார்.   மக்கலால் நிராகரிக்கப்பட்டு பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாஜகவுக்குத் தனது ஆதரவு மூலம் அவர் மீண்டும் பதவியை அடைய உதவி செய்துள்ளார்.

இதனால் நான் ஜேஜேபி கட்சியில் இருந்து விலகுகிறேன்.  பாஜகவுக்குத் துணை போகும் ஜேஜேபி கட்சியை பாஜகவின் இரண்டாம் அணி என அழைக்கலாம்.  இரண்டு கட்சிகளும் மக்களுக்கு விரோதமான கட்சிகள் என்பதால் இரு கட்சிகளையும் மக்கள் எதிர்க்க வேண்டும். “ எனக் கூறி உள்ளார்.