பிரியங்கா காந்தி கண்டனம் : பொதுமக்களை சாலையில் உட்காரவைத்து கிருமிநாசினி தெளித்த விவகாரம்.. வீடியோ

Must read

லக்னோ:

 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நான்கு மணி நேர அவகாசத்துடன் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் ஊரடங்கு உத்தரவு மூலம் முடக்கியது மத்திய அரசு. வாழவாதாரத்திற்காக இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

அப்படி இருந்தும் தலைநகர் தில்லியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் நூற்று கணக்கான மைல்கள் தங்கள் குடும்பம் மற்றும் உடைமைகளுடன் நடைப்பயணமாகவே சென்றனர்.

இப்படி பிழைக்க வந்த இடத்தில் வேலையும் இல்லாமல், சாப்பாடும் இல்லாமல் கஷ்டப்படுவதைவிட சொந்த ஊருக்கு செல்ல நினைத்த மக்கள் வழியெங்கும் கடைகள் இன்றி, வயிற்றுக்கு உணவின்றி, வழிநெடுகிலும் உள்ள ஊர்களில் கொரோனா அச்சத்தால் மக்கள் இவர்களை விரட்ட, தங்கள் சொந்த மாநிலங்களான உத்தர பிரதேசம், பீகார் போன்ற இடங்களுக்கு சென்று சேர்ந்தனர்.

அப்படி சென்றவர்களின் ஒரு குழு உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் நிறுத்தப்பட்டு, குழந்தை முதல் பெரியவர் வரை அனைவர் மீதும் கிருமிநாசினியை பீய்ச்சி அடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி மிகுந்த கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் “உபி அரசாங்கத்திடம் முறையிடுகிறேன்… நெருக்கடியான இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுகிறோம்… தயவுசெய்து இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.. தொழிலாளர்கள் ஏற்கனவே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார்கள்.. அவர்கள் மீது ரசாயனங்கள் தெளிக்க வேண்டாம்… இது அவர்களைப் பாதுகாக்காது… மாறாக அது அவர்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article