மொராதாபாத்

னது பயணத்துக்கு ரூ.8000 கோடி செலவில் விமானம் வாங்கும் மோடிக்கு விவசாயிகளுக்குப் பாக்கி வழங்க நிதி இல்லையா எனப் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதையொட்டி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  அவ்வகையில் மொராதாபாத் பகுதியில் ஒரு பேரணி நடந்துள்ளது.   இந்த பேரணியில் கலந்து கொண்டு பிரியங்கா காந்தி உரையாற்றி உள்ளார்.

பிரியங்கா காந்தி தனது உரையில் “வரும் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்,  ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்படும்.   மேலும் மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

சமீபத்தில் வேளான் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பிரதமர் மொபொடி சிறிதும் மதிக்கவில்லை.   தற்போது கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்த ரூ.4000 கோடி மட்டுமே செலவாகும்.   ஆனால் இந்த தொகையை வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது..

ஆனால் பிரதமர் மோடி பயணம் செய்ய ரூ.8000 கோடி செலவு செய்து தனியார் விமானத்தை அரசு வாங்குகிறது.  அது மட்டுமின்றி மத்திய அரசு ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டுகிறது.  இதற்கு மட்டும் மத்திய அரசிடம் நிதி உள்ளது.   ஆனால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை ரூ.4000 கோடியை வழங்க மத்திய அரசிடம் நிதி இல்லையா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.