விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் லண்டனில் தவிக்கும் பிரியங்கா சோப்ரா…

Must read

 

கொரோனாவை போன்று புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன.

இங்கிலாந்தில் இருந்து எந்த விமானமும் வெளிநாடுகளுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விமானம் ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்தில் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் ஒருவர்.

அவர் “டெக்ஸ்டஸ் பார் யூ” (‘’TEXTS FOR YOU’’) என்ற ஆங்கிலப்படத்தில் இப்போது நடித்து வருகிறார். சாம் கெனன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை ஜிம் ஸ்டராஸ் இயக்குகிறார்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘’SMS FR DICH’’ என்ற ஜெர்மன் படத்தில் ரீ-மேக்கான, இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி பிரியங்கா சோப்ரா லண்டன் சென்றிருந்தார்.

ஷுட்டிங் முடிந்து இந்தியா திரும்ப அவர் திட்டமிட்டிருந்த நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், லண்டனில் சிக்கியுள்ளார். இந்த முறை ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகளை இங்கிலாந்து விதித்துள்ளதால், பிரியங்கா சோப்ரா இங்கிலாந்தில் நீண்ட நாட்கள் தங்க நேரிடும் என தெரிகிறது.

– பா. பாரதி

More articles

Latest article