மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேர்ல்ட் பட்டங்கள் பெற்ற பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, ‘தி ஹீரோ- லவ் ஸ்டோரி ஆஃப் ஸ்பை’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

கொஞ்ச நாட்களில் இந்தி சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார். இப்போது நிறைய ஆங்கிலப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு ஏற்பட்ட ஒரு பகீர் அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா, ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

என்ன அனுபவம்?

அவரே சொல்கிறார்;

“அப்போது நான் சினிமாவுக்கு புதிது. ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.

ஏடாகூடாமான ஒரு பாடல் காட்சி. அந்த பாடல் காட்சியில் ‘எனது உள்ளாடையை கழற்ற வேண்டும்’ என டைரக்டர், படப்பிடிப்பு தளத்தில் கூறினார்.

ஆடிப்போனேன்.

இப்படி எல்லாம் என்னால் நடிக்க முடியாது என்று மறுத்து அந்த படத்தில் இருந்தே விலகி விட்டேன். அந்த டைரக்டரின் பெயரை சொல்ல விரும்பவில்லை” என்றார், பிரியங்கா.

– பா. பாரதி