லோர்

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மோடி மக்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டார் எனக் கூறி உள்ளார்.

ராஜஸ்தான்  மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  அவர் மாநிலம் எங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.  அவ்வகையில் அவர் நேற்று ஜலோரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாடை ஆதரிட்து பேசி உள்ளார்.

பிரியங்கா காந்தி தனது உரையில்,

“உங்களின் மிகப்பெரிய பிரச்சினையே விலைவாசி உயர்வுதான். ஆனால் உங்களின் பிரச்சினைகளைப் பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன். ஒருவர் அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வைத்திருக்கும்போது, அவரிடம் மக்கள் உண்மையைச் சொல்லமாட்டார்கள.

அதைப்போலத்தான் பிரதமரை சுற்றியிருக்கும் அதிகாரிகளும், அவரது சகாக்களும் கள நிலவரத்தை அவரிடம் கூறுவதற்கு அஞ்சுகின்றனர். இதனால் மக்களிடம் இருந்தும் அவர்களின் பிரச்சினைகளில் இருந்தும் பிரதமர் மோடி முழுமையாகத் துண்டிக்கப்பட்டு விட்டார். 

விலைவாசி உயர்வும், வேலையில்லாத் திண்டாட்டமும்தான் நாடு தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய 2 பிரச்சினைகள். ஆனால் யாரும் அவற்றுக்கு செவிமடுக்கவில்லை. 

ஜி20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும்போது நாம் பெருமை அடைகிறோம். ஆனால் மற்றொரு உண்மை என்னவென்றால், நாட்டின் ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள், வேலையின்மை காரணமாக இளைஞர்கள் திண்டாடுகிறார்கள். 

மத்தியில் ஆளும் பா.ஜனதா ஊழலுக்கு எதிராகப் போராடவில்லை. அதன் வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை. அது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கு மட்டுமே விரும்புகிறது.” 

என்று கூறி உள்ளார்.