கொல்கத்தா

மூத்த காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்சி மரணம் அடைந்தார்

மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்சி.  இவர் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்.  அத்துடன் அகில இந்திய கால்பந்து கமிட்டியின் தலைவராக இருபது வருடங்களுக்கு மேல் பணி ஆற்றி உள்ளார்.  மன்மோஹன் சிங் அமைச்சரவையில் தகவல்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

இவர் கடந்த 2008 அக்டோபர் மாதம் முதல் நோய்வாய்ப்பட்டிருந்தார்.  டில்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2009 முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வெகு நாட்களாக கோமா நிலையில் இருந்த இவருக்கு திடீரென இருதய அடைப்பு ஏற்பட்டுள்ளது.  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று மதியம் 12.10 மணிக்கு மரணம் அடைந்தார்.

இவருடைய மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மறைந்த பிரிய ரஞ்சன் தாஸ்முன்சியின் மனைவி தீபா காங்கிரஸ் உறுப்பினராக இருந்து வருகிறார்.  இவர்களுக்கு பிரியதீப் என்னும் மகன் இருக்கிறார்.

[youtube-feed feed=1]