தனியார் பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்! அன்பில் மகேஷ்

Must read

கரூர்: தனியார் பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கரூரில் செயல்பட்டு வரும் அரசு  நூலகத்தை ஆய்வு செய்ய செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் நூலகத்தின் வசதிகள் மற்றும் பள்ளிகளில் இருக்கும் பாதுகாப்பான சூழல் குறித்து ஆய்வுசெய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று கூறியது, கொரோனா பொதுமுடக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகளில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நீதிமன்ற  வழிகாட்டுதல் படி, தனியார் பள்ளிகளில் இரண்டு தவணைகளாக 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article