டில்லி
சுமார் 18 கோடி இந்தியர்களுக்கு ஏற்கனவே கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு 11.54 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 28000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை சுமார் 7.25 லட்சம் பேர் குணம் டைந்து தற்போது 4.02 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதையொட்டி தனியார் சோதனை நிறுவனமான தைரோகேர் நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தி உள்ளது.
நாடெங்கும் உள்ள 600 இடங்களில் 60000 பேருக்கு தைரோகேர் நிறுவனம் ஆண்டிபாடி சோதனை நடத்தி உள்ளது. மொத்தம் 20 நாட்கள் நடந்த இந்த சோதனை அதிகரபூர்வமான சோதனை அல்ல என நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனையில் சுமார் 15% பேருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது 3% வரை கூடவோ அல்லது குறையலாம் எனச் சொல்லப்படுகிறது.
இந்த சோதனையின் மூலம் சுமார் 18 கோடி இந்தியர்களுக்கு ஏற்கனவே கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சோதனை பின்கோட் அடிப்படையில் 600 பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ”தானேவில் உள்ள பிவண்டி பகுதியில் அதிக அளவில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது இங்கு 44%க்கும் அதிகமாக வாய்ப்புள்ளது. அடுத்ததாகப் பெங்களூரு தாசரஹல்லியில் 44%, டில்லியின் ஆனந்த விகாரில் 37.7%, ஐதராபாத் நகரின் ஜூபிளி ப்கௌதியில் 37.3%, தானேவில் 36.7%, மற்றும் மும்பை காட்கோபர் பகுதியில்36.7% வாய்ப்புள்ளது.
இந்த பகுதிகள் அனைத்தும் தற்போது அதிக கொரோனா பாதிப்பால் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.
இதைப் போல் மும்பையில் உள்ள அலிபாக் பகுதியில் 0.7%, பெல்லாரியின் வித்யாநகரில் 0.9%, புனேவின் அம்பெதானில் 1.5%, ரெவாரியில் 1.9%, சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் 3.3% என்னும் அளவில் மட்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.