சென்னை: மொத்தம் 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பொய்யான அறிக்கையை அளித்த சென்னையின் ஒரு தனியார் ஆய்வகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் அமைந்த அந்த ஆய்வகத்திற்கு சீல் வைத்தது சென்னை மாநகராட்சி.
ஆர்த்தி லேப்ஸ் என்ற பெயருடைய அந்த ஆய்வகம், அக்டோபர் 6ம் தேதி ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, பாசிடிவ் என்று அறிவித்த 139 மாதிரிகளை தனக்கு அனுப்புமாறு பொது சுகாதாரத் துறை கேட்டிருந்தது.
ஆனால், அவற்றில் 128 ஐ மட்டுமே அனுப்பியது ஆய்வகம். ஆனால், அந்த மாதிரிகளில் 84 மட்டுமே கொரோனா பாசிடிவ். இதன்மூலம், அந்த தனியார் ஆய்வகம் 34% நபர்களுக்கு பொய்யான தகவலை அளித்து, அவர்களின் மனஉளைச்சலுக்கு காரணமாகியுள்ளது.
கொரோனா நெகடிவ் உள்ள 44 நபர்களுக்கு, இன்னும் உண்மையான தகவல் அறிவிக்கப்படவில்லை. தேவையற்ற பீதியை உண்டாக்கக்கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

[youtube-feed feed=1]