சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தனியார் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலை வேண்டுவோர் இந்த முகாமில் கலந்துகொண்டு, தங்களது தகுதிக்கேன வேலைவாய்ப்பினை பெற முயற்சிக்கலாம்.
சென்னையில், வேலையில்லாதவர்களுக்கு வேலை வழக்கும் வகையில், அவ்வப்போது தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு முதல் டிகிரி, பொறியியல் உள்பட மேல்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்துக்கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செய்து வருகிறது.
இந்த நிலையில், வரும் 10ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியான, நியூகாலேஜ் வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவித்து உள்ளது.
இநத் முகாமில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறைந்த பட்சம் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் டிப்ளமாக, ஐடிஐ, நர்சிங், பார்மஸ், பொறியியல் படித்தவர்களும் பங்குபெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இம்முகாமில் சிறப்பு நேர்வாக உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார்துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் பல தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு கல்வித் தகுதிகளை உடைய பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள வரும் உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து நபர்களும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் நேரில் வருகைப்புரிந்து தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்