மும்பை:

நியூசிலாந்து நாட்டில் ஜனவரி 13ம் தேதி முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

இதில் இந்திய அணிக்கு மும்பை பேட்ஸ்மேன் பிரித்வி சாவ் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளார். இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பஞ்சாப் வீரர் சப்மேன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்ட இந்த பட்டியலில் ஹரியானா வீரர் ஹிமான்ஷூ ரானா, அஸ்ஸாம் வீரர் ரியான் பராக், மேற்கு வங்க வீரர் இஷான் போரெல் மற்றும் மன்ஜோத் கல்ரா, அபிஷேக் சர்மா, ஆர்யான் ஜூயல், ஹர்விக் தேசாய், சிவம் மாவி, கமலேஷ் நாகர்கோதி, ஆர்ஷ்தீப் சிங், அனுகுல் ராய் சிவ சிங், பங்கஜ் யாதவ், ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கூடுதலாக 5 வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.

இதற்கான பயிற்சி வரும் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த உலக கோப்பையை இந்தியா ஏற்கனவே 3 முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.