பெங்களூர்:

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்ட  சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சாதாரண கைதிகளுக்கு உரிய வசதியே அளிக்கப்பட்டு வந்தது. 10க்கு 8 அளவிலான அறையிலேயே இருவரும் தங்க வைக்கப்பட்டனர். கைதிகளுக்கு உரிய உடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை தெரிவித்தது.

இதற்கிடையில், சசிகலா, இளவரசி இருவரும்  வருமான வரி செலுத்துகிறோம். ஆகவே எங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் தேவை என்று கர்நாடக கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த கோரிட்டு, இருவருக்கும்  முதல் வகுப்பு சலுகைகள் அளிக்க உத்தரவிட்டது.  இந்த உத்தரவு உடனடியாக  ஜெயில் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கைதிகளான  சசிகலா, இளவரசிக்கு டி.வி., கட்டில், மின் விசிறி, செய்திதாள்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், வீட்டு சாப்பாடு வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்துவிட்டது.