விருதுநகர்:
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அருப்புக்கோட்டை நிர்மலாதேவியிடம் கவர்னர் அமைத்துள்ள சந்தானம் தலைமையிலான விசாரணை குழுவினர் இன்று சிறைக்கு சென்று விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்படும் என விசாரணை அதிகாரி சந்தானம் கூறிய நிலையில் இன்று சிறைக்கு சென்று விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் 5 நாள் நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரணை செய்துள்ள நிலையில், அவருக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டு, கைதான பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு இன்று விசாரணை நடத்துகிறது.
ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து அவரது குழுவில் உள்ள 2 பெண் அதிகாரிகளும் நிர்மலாதேவி மீது புகார் கூறி மாணவிகளிடமும் விசாரணை நடத்தியது.
அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு நிர்மலாதேவியிடம் இன்று சிறையினுள் விசாரணை நடைபெற உள்ளது.