டில்லி:

ந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் புலே படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுங்கள் என்று மத்தியஅரசுக்கு  விடுதலை சிறுத்தைக்கட்சி எம்.பி. ரவிக்குமார் மக்களவை யில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக விசிக விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். அதில், “தற்போது ரூபாய் நோட்டில்  பெண் ஒருவரின் உருவத்தை அச்சிடுவதற்கு இதுவே சரியான தருணம். இந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலேவின் (1831-1897 உருவத்தை நமது நாட்டின் ரூபாய் நோட்டில் அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “இப்போது, சுதந்திர இந்தியாவின் முழுப் பொறுப்பை வகிக்கும் நிதியமைச்சராக ஒரு பெண் நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதார விவகாரங்களை நிர்வகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.” என்றும்  தெரிவித்துள்ளார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் விரைவில் நாடாளுமன்றத் தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.