டெல்லி

பிரதமர் மோடி தமிழர்களுக்கு தமிழிலேயே புத்தாண்டு கூறியுள்ளார். பிரதமரின் வாழ்த்திற்கு பலரும் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் ‘தமிழ்ப் புத்தாண்டு’ எனும் ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஊரடங்கு உத்தரவை மே 2 வரை நீட்டிப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

“தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலேயே கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது” எனவும் ஊரடங்கு அறிவிப்பில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.