ஐதராபாத்:
பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐதராபாத்தில் 4 நாட்கள் மாநில டிஜிபிக்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐதராபாத் வந்துள்ளனர்.

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தெலுங்கானா மாநிலம், ஆசிபாபாத் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த ஸ்ரீதர் என்ற சப்-இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் பாதுகாப்பு பணிக்காக, ஐதராபாத்தின் உப்பராப்பள்ளி பகுதிக்கு பணிக்கு வந்திருந்தார். இவர் நேற்று  வ திடீரென தனது கை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடும்பப் பிரச்சனை காரணமாக ஸ்ரீதர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை காரணமாக மாநாடு நடைபெறும் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.