ஆபர்: மக்களை ஏமாற்றும் மொபைல்போன் நிறுவனங்கள்….!

Must read

 
டில்லி,
ற்போது வோடபோன் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களுக்கான  பிரத்யேக திட்டம்  என்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.53/-க்கு 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா ஒரு மாதம் வாலிடிட்டியில் பெற முடியும் என்று அறிவித்து உள்ளது.
ஏற்கனவே ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள்  இதுபோன்ற சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது வோடபோன் நிறுவனமும் இந்த போட்டியில் குதித்து உள்ளது.
வெறும் ரூ.53/-க்கு 1 ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வோடாபோன் வழங்கும் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்ப்போம்.
முதலில் நீங்கள் இந்த திட்டத்தை பெற வேண்டுமானால் அதற்கான ரெண்டல் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. நீங்கங் ரெண்டல் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் மேற்கண்ட ஆபரை பெற முடியாது.
இதற்கான ரெண்டல் எவ்வளவு தெரியுமா? ரூ.1501, ரூ.748, ரூ.494 கட்ட வேண்டியதிருக்கும்.

வோடபோன் மேலும் இரண்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரூ. 794/- பேக் 3ஜிபி டேட்டாவும், ரூ.494/- பேக் 2ஜிபி டேட்டாவும்  வழங்குகிறது.
இந்த திட்டம் பிரத்யேகமாக தமிழ்நாடு பயனர்களுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாய்ப்பை பெற விரும்பும் பயனர்கள், முதலில் ரூ.1,501/-க்கான ரெண்டல் ரீசார்ஜ் செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து அவர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் 15ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை பெறுவார்கள்.
ரூ.1,501/- ரெண்டல் ரீசார்ஜ் செய்த எண்ணிற்கு இரண்டாம் மாதத்தில் இருந்து அதாவது அடுத்த மாதம் முதல், 1ஜிபி தரவு ரூ.53/- என்ற விலையிலும், 2 ஜிபி டேட்டா ரூ.103/- என்ற விலையிலும், 5ஜிபி டேட்டா ரூ.256/- என்ற விலையிலும் பெறலாம் என்று அறிவித்து உள்ளது.
ரூ.748/- மற்றும் ரூ.494/- ஆகிய இரண்டு திட்டங்களும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஆறு மாதங்களுக்கு மட்டுமே அதன் நன்மையை அனுபவிக்க முடியும்.
மற்றும் ரூ.748/- திட்டத்தில் 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா விலை ரூ.106/- என்பதும் மற்றும் ரூ.494/- திட்டத்தில் 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா விலை ரூ.122/- என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் ரிலையன்சின் ஜியோவுக்கு போட்டியாக விலை குறைப்பை அறிவித்து வருவதாக மக்களை ஏமாற்றி வருகின்றன.
ஜியோவில் எந்தவிதமான ரெண்டல் அமவுன்டும் கட்ட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மற்ற அனைத்து நெட்வொர்க்கிலும் ரென்டல் அமவுன்ட் என்று ஒரு குறிப்பிட்ட பணத்தை நம்மிடம் இருந்து வாங்கிக்கொண்டே சலுகையை தருகிறார்கள். 
இதன் காரணமாக அவர்கள் வழங்கும் சலுகை போக மீதமுள்ள பணம் நாம் கட்டியுள்ள ரென்டல் பணத்திலிருந்து கழிக்கப்பட்டு விடுகிறது.
இதை கூட்டிக்கழித்து பார்த்தால்…. இவர்கள் அறிவிப்பதில் எந்தவித சலுகையும் இல்லை என்பதே தெளிவாகிறது.
இது ஒருவகையான மக்களை ஏமாற்றும் வேலை..

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article