டில்லி:
பிரதமர் மோடி, தனது அரசு முறை சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு, பெர்லினிலிருந்து நள்ளிரவு டில்லி திரும்பினார்.
5 நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போடி பயணத்தை முடித்து நள்ளிரவு டில்லி திரும்பினார்.
மோடியின் முதல்நாள் பயணமாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றார். பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு வந்தார். அங்கு நடைபெற்ற ‘காமன்வெல்த் உச்சி மாநாட்டில்’ பங்கேற்று இருநாடு களுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
பின்னர் அங்கிருந்து ஜெர்மன் புறப்பட்டுச் சென்றார். பிரிட்டனின் பெர்லின் விமான நிலையத்தில் மோடியை அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் நேரில் வரவேற்றார். தொடர்ந்து மெர்க்கல் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின் இருவரும் இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தனது அரசு முறை சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, பெர்லினிலிருந்து டில்லி திரும்பினார். அவருக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.