நியூயார்க்:

ந்தியாவில் சுத்தத்தை வலியுறுத்தி ‘சுவாச் பாரத் அபியான்’ திட்டத்தை தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வரும் இந்திய பிரிதமர் மோடிக்கு  ‘குளோபல் கோல்கீப்பர் விருது’  அமெரிக்காவில் வழங்கப்பட்டது.

இந்த விருதை பிரபல கணினி சாப்ட்வர் நிறுவனமான மைக்ரோ சாப்ட் நிறுவனர் மற்றும் தொழிலதிபர் பில்கேட்ஸ், மெலிண்டா பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில்  பிலிகேட்ஸ் வழங்கினார்.

ஒரு வாரம் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொண்டு வருகிறார். ஏற்கனவே டெக்சாஸ் மாகாணத்தின்  ஹூஸ்டன் நகரில்  அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்துகொண்ட  ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இந்தியாவில் சுவாச் பாரத் அபியான் என்ற பெயரில் தூய்மை பாரதம் திட்டத்தை மோடி தொடங்கி வைத்ததற்காக அவருக்கு குளோபல் கோல்கீப்பர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விருது, மைக்ரோ சாப்ட் நிறுவனர் மற்றும் தொழிலதிபர் பில்கேட்ஸ், மெலிண்டா பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி,  விருதுக்க நன்றி தெரிவித்த மோடி, சுவாச் பாரத் அபியான் திட்டம் மூலம்  இந்தியாவில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டதாகவும் அது பெரும்பாலும் ஏழை மக்களுக்குத்தான் பலன் அளித்துவருகிறது என்றும் குறிப்பிட்டார்.‘