டெல்லி: தமிழகத்தின் தலைநக்ர் சென்னை முதல், அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை (fiber Cable) அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான சேவையை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை  கடல் வழியாக ஃபைபர் கேபிள் போடப்பட்டுள்ளது. ரூ.1224 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று காலை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.  இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சென்னை – போர்ட் பிளேயருக்கும், போர்ட் பிளேயரில் இருந்து லிட்டில் அந்தமான், கார்நிகோபர், கமோர்தா, கிரேட் நிகோபர் போன்ற இடங்களுக்கும் அதிவிரைவான மொபைல், இணையதள சேவைகள் கிடைக்கும்.

இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடியால் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில்,   இன்று  காணொளி காட்சி மூலமாக அந்தமான் மற்றும் நிக்கோபாருடனான இணைப்பை அதிகரிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டம், அந்தமான் மற்றும் நிக்கோபாரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வாழ்க்கை எளிமைக்கான நமது உறுதிப்பாட்டின் அடையாளமாகும். இதன் மூலம், ஆன்லைன் வகுப்புகள், சுற்றுலா, வங்கி, ஷாப்பிங் அல்லது டெலிமெடிசின் என இருந்தாலும், அந்தமான்-நிக்கோபாரில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்போது எளிமையான அணுகலை பெற முடியும்.

இந்தியாவின் சட்டம்-கிழக்குக் கொள்கையின் கீழ் அந்தமான் மற்றும் நிக்கோபரின் பங்கு முக்கியமானது என்று கூறியவர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 12 பாதிப்புகளில் அதிக பாதிப்பு திட்டங்கள் விரிவுபடுத்தப்படு கின்றன. மொபைல் மற்றும் இணைய இணைப்பின் முக்கிய சிக்கல் இன்று தீர்க்கப்பட்டுள்ளது. இது தவிர, சாலை, காற்று மற்றும் நீர் வழியாக உடல் ரீதியான தொடர்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.