உலகிலேயே மிகப் பெரிய பிரம்மாண்டமான பகவத் கீதை புத்தகத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

pakavath

இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை மிகப்பெரிய புத்தகமாக வடிவமைக்க டெல்லியில் உள்ள ஸ்கான் கோவில் நடவடிக்கை எடுத்தது. சுமார் 670 பக்கங்களுடன், 800 கிலோ எடைக் கொண்டதாக பகவத் கீதை புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த புத்தத்தில் 18 வகையான அறிபுத ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்காக இந்த பிரமாண்ட புத்தகம் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் அச்சிடப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகத்தை இன்று டெல்லி இஸ்கான் கோவிலில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்கம் கொண்ட “இஸ்கான்” கோவில் உலகின் பிரமாண்ட பகவத் கீதை கொண்ட கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது.