டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு பிறகு, முதன்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. 2 நாள் பயணமாக அவர் பங்களாதேஷ் சென்றுள்ளார். இன்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
வங்காளதேசத்தின் சுதந்திர தின பொன்விழா, ‘வங்கபந்து’ ஷேக் முஜிப்பூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவான தேசிய தியாகிகள் நினைவு மற்றும் தேசிய தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிலையில், இந்திய பிரதமர் மோடியும் கலந்துகொள்கிறார்.
மேலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அப்போது, இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மேற்குவங்க மாநிலத்தில் அதிகமாக வசிக்கும் மடுவா இன மடுவா இன மக்களின் வழிப்பாட்டு தலம் உள்பட சில கோவில்களுக்கும் சென்று மோடி சென்று மரியாதை செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மோடியின் பங்களாதேஷ் பயணம் மேற்குவங்க மாநில மக்களின் வாக்குகளை பெறும் தந்திரமா?