டெல்லி: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு.  இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து  மக்கள் சேவை ஆற்றினார். வயது முதிர்வு காரணமாக 86 வயதாகும்,  டத்தோ ஸ்ரீ சாமிவேலு இன்று அதிகாலை காலமானார். இவர  மலேசிய அமைச்சரவை யில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்தவர். அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டத்தோ சாமிவேலு மறைவுக்கு இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய  பிரதமர் நரேந்திர மோடி, டத்தோ சாமிவேலு மறைவுக்கு  தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,  “மலேசியாவின் முன்னாள் கேபினட் அமைச்சரும், மலேசியாவின் முதல் பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர். எஸ். சாமிவேலுவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.