சென்னை:   ஜனவரி 23ந்தேதி சென்னையை அடுத்த மது​ராந்​தகம்  பகுதியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி  பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்க இருப்​ப​தால், டெல்​லியி​லிருந்து வந்த எஸ்​பிஜி குழு​வினர் சென்னை விமான நிலை​யத்​தில் ஆய்​வுக்​கூட்​டம் நடத்​தினர்.

 பிரதமர் மோடி வருகையால் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் Red Zone-ஆக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிகப்பெரிய அளவில் நடத்தப்பட உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில்  கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சிறப்பு விருந்தினராக  பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கூட்டணிக் கட்சி தலைவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

இதற்​காக பிரதமர் திரு​வனந்​த​புரத்​தில் இருந்து வரும் 23-ம் தேதி பகல் 1.15 மணிக்கு தனி விமானத்​தில் புறப்​பட்​டு, நண்​பகல் 2.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலை​யம் வரு​கிறார். அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் பகல் 2.25 மணிக்கு புறப்​பட்​டு, மாலை 3 மணிக்கு மது​ராந்​தகம் பொதுக்​கூட்ட திடலுக்கு செல்​கிறார்.

மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கும் பிரதமர் மாலை 4.30 மணிக்கு அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் புறப்​பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலை​யம் வரு​கிறார்.

அங்​கிருந்து மாலை 5.05 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்​லிக்கு புறப்​படு​கிறார்.

பிரதமரின் வரு​கையை ஒட்டி டெல்​லி​யில் இருந்து சிறப்பு பாது​காப்​புப் படை (எஸ்​பிஜி) ஏஐஜி அமி சந்த் யாதவ் தலை​மையி​லான குழு​வினர் சென்னை விமான நிலை​யம் வந்​துள்​ளனர்.  விமான நிலை​யத்​தில் பிரதமரின் பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து ஆய்​வுக் கூட்​டத்தை நடத்​தினர். அந்த கூட்​டத்​தில் சென்னை மாநகர போலீஸ், மத்​திய தொழில் பாது​காப்​புப் படை, மாவட்ட வரு​வாய்துறை, சென்னை விமான நிலைய உயர் அதி​காரி​கள், மத்​திய, மாநில உளவுப் பிரி​வினர், முக்​கிய பிர​முகரின் பாது​காப்பு அதி​காரி​கள், மருத்​து​வம் மற்​றும் தீயணைப்​புத் துறை அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

அப்​போது பிரதமரின் தனி விமானம் வந்து நிற்​கும் பகு​தி, மது​ராந்​தகம் செல்ல பயன்​படுத்​தப்​படும் ஹெலி​காப்​டர் நிற்​கும் பகு​தி​யில் எந்​தெந்த அதி​காரி​கள் கண்​காணிப்​புப் பணி​களில் ஈடுபட வேண்​டும் என்​பது குறித்து குழு​வினர் ஆய்வு மேற்​கொண்​டனர். பிரதமர் வரு​வதையொட்​டி, 23-ம் தேதி வரை சென்னை விமான நிலை​யம் முழு பாது​காப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

அந்த குழு​வினர் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகம் சென்​று, அங்கு பொதுக்​கூட்​டம் நடக்​கும் பகு​தி, பிரதமரின் ஹெலி​காப்​டர் வந்து இறங்​கும் இடம் ஆகிய​வற்​றை​யும் ஆய்வு செய்​தனர்.

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி,  பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் Red Zone-ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. டிரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள், ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளன.

[youtube-feed feed=1]